Skip to main content

அன்புடன் அகத்தியர் - 17 - பொதுவாக்கு!

                                                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு! 

ஆடி அமாவாசை 08/8/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு உரைத்த இடம் திருவண்ணாமலை

ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகிறேன் அகத்தியன்.

அப்பனே அருள்கள் அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன்.

அப்பனே நல் முறையாக மாற்றம் இவ்வுலகத்தில் சில சில தீவினைகளும் நடக்கும் என்பேன்.

ஆனாலும் எவையென்று கலியுகத்தில் நான் காப்பேன் என்பேன்.

அப்பனே நல் முறைகளாக இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன் நல் முறையாக என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் தந்து கொண்டு வந்துதான் இருக்கின்றேன் அப்பனே நல் முறைகளாக குறைகள் இல்லை.

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விதியின் பாதையிலே சென்று நல் முறையாக கடந்துவிட்டால் அப்பனே பிறப்புக்கள் இல்லை.

எவை எவை என்று உணர்வதற்குள் காலம் கடந்து விடுகின்றது இவ்வுலகத்தில் நிலையானது ஏதுமில்லை அப்பனே. கஷ்டங்கள் வருகின்றது என்று கவலைப்படத் தேவையில்லை என்னால் அனைத்தும் செய்ய முடியும் என்பேன். அப்படி அனைத்தும் செய்துவிட்டால் பிரம்மாவுக்கு வேலை ஏது?. பின் நல் முறையாய்  பிறவிப்பெருங்கடலையும்  கடக்க முடியாது என்பேன். அதனால்தான் அப்பனே சொல்லுகின்றேன் சில கஷ்டங்களை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும். அப்பனே, கஷ்டங்கள் அனுபவங்கள் ஆகும் என்பேன்.

நல் முறைகளாக விதியின் பாதையிலே சென்று அனைத்தையும் தீர்க்க வேண்டும். அப்பனே இதைத்தான் நான் கூறிக் கொண்டே வந்து இருக்கின்றேன்.

விதியின் பாதையிலே சென்று நான் மதியால் வெல்ல வைப்பேன் என்பேன்.

இப்பூவுலகில் எதனை எதனை தேடிச் சென்று திரிந்தாலும் அதெல்லாம் அழியக்கூடியது அப்பனே.

இறைவனே மெய் என்பதை உணர்ந்து விட்டால் அப்பனே இறைவனே வந்து உதவி செய்வான் யானும் உதவிகள் செய்வேன் அப்பனே.

அப்பனே காலங்கள் செல்கின்றது காலங்கள் செல்ல செல்ல சித்தர்களும் எழுவார்கள் என்பேன்.

நல் முறையாக இவ்வுலகத்தில் இறையே பலம் என்பேன் இறை தான் உலகத்தில் பெரியது அப்பனே.
இவ்வுலகத்தில் அழிக்க முடியாதது இறைவனே என்பேன். மற்றவை எல்லாம் அழியக்கூடியது என்பேன்.

எவ்வாறு என்பதை கூட சூரியனும் ஒருநாள் மறைந்துவிடும். சந்திரனும் ஒரு நாள் மறைந்துவிடும். இவையெல்லாம் இயக்கும் தகுதி அப்பனே இறைவனிடத்தில் மட்டுமே.

இறைவனுடைய அனுகிரகம் பெற்று நல் முறையாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

சூரியனும் மக்களை நல் முறையாக பார்க்கின்றான் இறைவனிடத்தில் சொல்கின்றான் சூரியன் எவ்வாறு என்பதையும் கூட

இறைவா மனிதர்களிடத்தில் மாயை எண்ணங்கள் தோன்றி விட்டது நான் எதைச் செய்ய வேண்டும் பலமாக வெளிச்சம் காட்ட வேண்டுமா? வெப்பத்தை அதிகப்படுத்த வேண்டுமா? நல் முறைகளாக சாந்தப்படுத்த வேண்டுமா? என்று சூரியனும் கேட்கின்றான்.

ஆனாலும் இறைவன் சூரியனே சற்று பொறு சூரியனே சூரியனே என்கின்றான்.

ஆனாலும் சூரியனுக்கும் மனிதர்களைப் பார்த்தால் கோபம் தான் சற்று அதிகம்.

நல் முறைகளாக எதனை என்றும் எவ்வாறு என்பதும்கூட மனிதர்கள் மாறினால் இயற்கையும் மாறும் என்பேன் இயற்கைதான் இறைவன் என்றும் வகுத்துக் கொள்ளலாம்.

அப்பனே காலங்கள் மாறும்.

அப்பனே காலங்கள் மாறுவதில்லை மனிதன் மாறுகின்றான் அதனால் காலமும் மாறுகின்றது.

அப்பனே இனிமேலும் மனிதர்கள் மனதில் சற்று நல் முறையாகவே அனைத்தும் செய்து வந்தால் காலம் கனிந்து வரும் .

பின் தீவினைகள் செய்துவிட்டால் காலமும் நிச்சயமாய் தீவினை தான் செய்யும்  என்பேன் அப்பனே.

அப்பனே நல் முறையாய் பின் பருவ காலங்கள் மாறி மாறி அமையும் என்பேன் ஏனென்றால் மனிதன் மனம் குரங்கு என்பேன்.

அப்பனே இறைவனை விட அடுத்து பெரிது மனம் என்பேன்.

மனதை நல் முறையாக அடக்கி விட்டால் இவ்வுலகத்தில் மனம் எவ்வாறு என்பதையும் கூட இறைவனே அந்த மனதில் இறங்கி விடுவான் அப்பனே.

இந்த உலகத்தில் பெரியது என்றால் மனதை அடக்குவது தான் என்பேன்.

அப்பனே நல் முறையாக மாயையில் மனிதர்கள் விழ விழ மனிதர்களுக்கு ஆபத்து என்பேன் ஆனாலும் நான் விடமாட்டேன் மாய வலையில் நீங்கள் சிக்கிக் கொள்வதற்கு.

அப்பனே மனிதன் நினைப்பது இறைவனுக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது நல் முறைகள் ஆகவே ஆனால் பிறப்பின் ரகசியம் பிறக்கும்போது மனதில் எண்ணங்கள் இல்லை. வளரும் போது சில எண்ணங்கள். அப்பனே இவ்வெண்ணங்கள் அழிப்பதற்கு அப்பனே

மாயையில் சிக்கிக் கொண்டு கர்மங்களை பலமாக பெற்றுக் கொள்வதற்கு ஆனாலும் இதனை நான் விட்டு விடுவதில்லை. அப்பனே என்னை வணங்குபவர்களுக்கு ஒன்றை மட்டும் நன்கு கெட்டியாக சொல்கின்றேன், கர்மத்தை சேர்க்க விடமாட்டேன் அதனை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

அப்பனே நல் முறைகள் ஆகவே அனைத்தும் நிறைவேறும் என்பேன் நல்முறையாக மெய் பொருள் என்பதை உங்களுக்கு காட்டிக் கொண்டே இருப்பேன்.

இன்றைய பொழுதும் இத்திருத்தலத்தில் இருந்து அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் மீண்டும் வந்து வாக்குரைக்கின்றேன். அதிவிரைவிலே உண்மைகளை நல் முறையாக சொல்கின்றேன். அப்பனே அனைவருக்கும் என் நல்லாசிகள்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அன்புடன் அகத்தியர்.....தொடரும்!

Comments

Popular posts from this blog

அன்புடன் அகத்தியர் - 21 - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

                                                           இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!  24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்! நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல...

அன்புடன் அகத்தியர் - 14 - ஓதிமலை அருள்வாக்கு-1

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1    ஓதி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 1 ஆதி பரம்பொருளை உள் நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன் அப்பனே நலன்கள் மேலோங்கும் என்பேன்! நல் முறையாக முருகனும் எவ்வாறு என்பதை உணர்ந்து நல் ஆசிகளை தந்து கொண்டே இருக்கின்றான்! ஆனால் மக்களோ எதை எதை என்று கூட மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இப்படியே இவை செல்லச் செல்ல அழிவுதான் ஏற்படும் என்பேன். ஆனாலும் நல் முறையாக தாய் தந்தை நீயே அனைத்தும் நீயே என்று வேண்டிக் கொள்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன்! என்பேன் இனிமேலும், நல் முறையாக அப்பனே எவை எவை கூறும் அளவிற்கு கூட தகுதியான மனிதர்களை மட்டும் தான் இங்கே அழைப்பான் மு...