இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1016 - அன்புடன் அகத்தியர் - சுருளிமலையில் பொதுவாக்கு!
சுருளி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு!
அகத்தியா
அகத்தியா என்று பக்தி காட்டி வணங்கினால் பிரம்மதேவன் மனமிரங்கி அருளுவார்.
ஏனென்றால் பிரம்மதேவனுக்கு அகத்தியன் நான் பல சமயங்களில் உதவி செய்து
இருக்கின்றேன்.
அதுபோலத்தான் அப்பனே சித்திரகுப்தன் அவனுக்கும் பல நேரங்களில் நான் உதவி இருக்கின்றேன் பரிகாரங்கள் கூறி இருக்கின்றேன்.
மனிதர்களின் தலையெழுத்து விதியை பிரம்ம தேவனிடம் சித்ரகுப்தன் இடம் சொல்லி மாற்ற முடியும் என்னால். ஆனால் அது தவறாகிவிடும்.
அப்பனே
மனிதர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமான கட்டங்கள் கஷ்டப்பட்டு
கஷ்டப்பட்டு வந்தால் தான் இறைவனைக் காண முடியும். இல்லையென்றால்
காணமுடியாது அப்பனே. அதனால்தான், என்னை நம்பி வருபவர்களுக்கு சிறிதளவு
கஷ்டத்தைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவத்தைக் கொடுத்தது இறைவனைக்
காண்பதற்கு வழி காட்டுகிறேன் அப்பனே!
அப்பனே
மனிதர்களுக்கு மேன்மையான எண்ணம் வேண்டும்! மேன்மையான எண்ணம் எவ்வளவு
இருக்கிறதோ, அவர்களே முன்னேறி செல்வார்கள். அப்பனே மேன்மையான எண்ணம் இல்லை
எனில், இறைவனை எவ்வளவு தேடினாலும், இறைவன் கிடைக்க மாட்டான். மேன்மையான
எண்ணங்களும் சிந்தனைகளும் தர்ம காரியங்களும் ஈடுபடுவதும் இறைவனைக் காண வழி
செய்யும் அப்பனே!
யாருக்கும்
தீங்கு செய்யாத குணமும், யார் மீதும் பொறாமை இல்லாத குணமும், இருந்தால்
வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றமும் கிட்டும் அப்பனே!
அறம்
செய்ய விரும்பு தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து அ என்றால் அறம்
அப்பனே! அறம் என்றால் தர்மம் நல்வழிகளில் யார் தர்மம் செய்து வருகிறார்களோ
அவர்களுக்கு இறைவன் நிச்சயம் காட்சி தருவான்! அது வேண்டும் இது வேண்டும்
என்று பலனை எதிர்பாராமல் எவரொருவர் தர்ம காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம்
நல் முறையாக செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் இறை தரிசனம் உண்டு
அப்பனே!
அப்பனே
அகத்தியா நீயே பார்த்துக்கொள் என்று வணங்கி விட்டால் போதும் நான்
பார்த்துக்கொள்வேன்! என்னிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று
கேட்கக்கூடாது! அகத்தியா அகத்தியா என்று அன்பால் வணங்கினால் போதுமானது
எனக்கு தெரியும் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அப்பனே!
நல்
முறையாக இப்போதே சொல்லி விடுகிறேன் அப்பனே! பிரம்மதேவனுக்கு எந்த
மாதிரியான மனிதர்களை பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறேன் அப்பனே! பொறாமை
குணங்கள் இருக்கக்கூடாது. சாந்தமான மனதாய் இருக்க வேண்டும். தியானங்கள்
செய்ய வேண்டும். தன்னைப்போல் பிறரை எண்ண வேண்டும். இவை போன்ற எண்ணங்கள்
இருக்கும் மனிதர்களை பிரம்மதேவன் விரும்புவான், அவனும் பிரியப்பட்டு
தலையெழுத்தை மாற்றி தருவான் அப்பனே!
ஆணவம்
அகங்காரம் தீய குணங்கள் இருந்தால் பிரம்மதேவன் மேலும் தட்டி வைத்து கீழே
விழச் செய்து விடுவான். கிரகங்களுக்கு கட்டளையிடுவான். மனிதர்கள் நிச்சயமாக
அவர்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அப்பனே மனிதர்கள் சரியான வழியில்
சென்றால் பிரம்மனே அவர்கள் தலையெழுத்தை மாற்றி விடுவான்
வரக்கூடிய
காலகட்டங்கள், மனிதர்களுக்கு மேலும் புதிய புதிய நோய்களை தரும் அப்பனே!
நோய் நொடிகளிலிருந்து மனிதர்களை காக்க நான் முதலிலேயே மூலிகைகளை கூறி
இருக்கின்றேன்! அவற்றை சரியாக உட்கொண்டு வருதல் வேண்டும் அப்பனே! இதுவே
மனிதர்களுக்கு பரிகாரமாக உரைத்திருக்கிறேன். நிச்சயம் அனைவரும் நான் கூறிய
மூலிகை மருந்துகளை உட்கொள்ளுதல் வேண்டும் அப்பனே.
வரக்கூடிய
காலங்களில் உண்மைக்கு காலங்கள் இல்லை அப்பனே. என்போன்ற சித்தர்களை
வணங்குங்கள் நாங்கள் கூறும் வாழ்க்கை முறைக்கு மாறுங்கள் நல்லதே நடக்கும்
அப்பனே. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை சித்தர்கள் ஆகிய
நாங்கள் எடுத்து சொல்லுவோம். நல்லவர்கள் இந்த காலகட்டத்தில் மறைந்து
வாழ்வார்கள். அவர்கள் தம்மை வெளிப்படுத்த மாட்டார்கள் அப்பனே. இருக்கும்
நல்லவர்களை சித்தர்கள் ஆகிய நாங்கள் வெளிக் கொணர்வோம்.
ஒன்றுமில்லாமல்
மிகவும் கஷ்டப்பட்டு அப்படி கஷ்டப்பட்டாலும் நல்லதே நினைத்துக்கொண்டு
நல்லது செய்து வரும் அவர்களை நாங்கள் வெளியே வர வைத்து அனைவருக்கும் தெரிய
வைப்போம். மனிதர்களால் முடியாத தெய்வ காரியங்களையும் நல்ல காரியங்களையும்
சித்தர்கள் நாங்கள் செய்து முடிப்போம். சித்தர்கள் அனைவரும் பூமியில் தான்
உலாவி கொண்டிருக்கின்றோம் அப்பனே. சித்தர்கள் அனைவரும் இறங்கி வந்து
விட்டார்கள். மனிதர்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும் சித்தர்கள் நாங்கள்
இனி பார்த்துக்கொள்வோம் அப்பனே!
மனிதர்கள் புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் பல மனிதர்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே.
மனிதர்கள்
புண்ணிய காரியம் செய்து விட்டு நான் அதைச் செய்வேன் இதைச் செய்தேன் அந்தப்
புண்ணிய காரியத்தை செய்தேன் இந்த புண்ணிய செயலைச் செய்தேன் என்று
கூறிக்கொண்ட நடந்தால் அவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் அவர்களுக்கு
கிடைக்காது அப்பனே. நான் அவ்வளவு புண்ணிய காரியம் செய்து இருக்கிறேன்
இதையெல்லாம் செய்து இருக்கின்றேன் எனக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்றும்
கூறக்கூடாது அப்பனே. நீங்கள் செய்யும் புண்ணிய செயல்கள் இறைவனுக்கும்
எங்களுக்கும் தெரிந்தால் மட்டும் போதுமானது நிறைய மனிதர்களை நாங்கள்
பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம் அப்பனே. அவர்கள் புண்ணியச் செயல்கள்
செய்தாலும் கஷ்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏன் அவர்களுக்கு
கஷ்டம் வருகிறது? ஏனென்றால் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று
கூறிக் கொண்டு திரிகின்றார்கள். இதனால் தான் அவர்களுக்கு புண்ணிய பலன்
கிடைக்காமல் கஷ்டம் வருகிறது மனிதர்கள் அவர்கள் செய்யும் புண்ணியச்
செயல்களை இறைவா உன்னருளால் அனைத்தும் நன்றாக நடக்கட்டும் என்று கூறி
எவரொருவர் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலனுண்டு அப்பனே.
மனிதர்கள்,
குலதெய்வம் விஷயங்களில், மனிதன் தவறு செய்கின்றான் அப்பனே பெண்களுக்கு
இரண்டு குல தெய்வம் அவர்கள் பிறந்த வீட்டில் வழிபடும் குலதெய்வம்
திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்றால் கணவன் வழி குலதெய்வம் அதுவும் குல
தெய்வமாகி விடுகிறது. அதனால் பெண்களுக்கு இரண்டு குல தெய்வங்கள் இரு குல
தெய்வங்களையும் வணங்கி வர அவர்கள் வாழ்க்கையில் சிறப்பைத் தரும் அப்பனே.
மனிதர்கள்
இறைவனை தேடும்பொழுது கஷ்டத்தை தான் முதலில் சந்திக்க வேண்டும் அப்பனே.
கஷ்டங்களெல்லாம் அனுபவங்கள் ஆகிவிடும் கடைசியில் இறைவனே மெய் என்று
உணர்வார்கள் மனிதர்கள் அனைவரும். மாயையின் பிடியிலேயே சிக்கிக்
கொண்டிருக்கிறார்கள் அப்பனே. மாயைவழியே சென்று கொண்டிருக்கின்றார்கள்
அப்பனே. இறைவனை வணங்குவதற்கு கஷ்டமாக நினைப்பார்கள். கஷ்டங்கள் வரும்.
கஷ்டத்திலும் நிலையாக நின்று இறைவனை நினைத்து இறைவா நீயே என் கதி என்று
நினைத்தால் அந்த இறைவனே வந்து அழைத்துச் செல்வான் அப்பனே. ஆகையால்
நல்முறையாக அப்பனே நேர்வழியில் செல்லுங்கள். யாருக்கும் துரோகங்கள்
செய்யாதீர்கள். வஞ்சகம் ஏமாற்றுதல் போன்றவை செய்துகொண்டு
இருந்தால், நீங்களே ஏமாந்து போவீர்கள் அப்பனே. வாழ்க்கையில் ஒன்றும் செய்ய
இயலாது. நாங்கள் காட்டிய வழிகளில் வாருங்கள். இறைவனை நிச்சயம் நாங்கள்
காண்பிப்போம். வரும் காலகட்டங்களில் கூட உண்மை மறைந்துவிடும். ஆனால் எவர்
ஒருவர் நேர்மையை கடைப்பிடித்து தர்ம சிந்தனையுடன் கூடிய பக்தியை
காட்டுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு. அதனால் அப்பனே நல்ல
முறையில் நடந்துகொள்ளுங்கள்.
மீண்டும் வந்து வாக்கு உரைக்கின்றேன்!
ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அன்புடன் அகத்தியர்.....தொடரும்!


Comments
Post a Comment