இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
நம் குருநாதர்:- அப்பனே, அனைவருக்குமே வேலைதான் முக்கியம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். புண்ணியம் ஒன்று இருக்கின்றதே, அதை மறந்து விட்டார்கள் அப்பனே. அப்பனே தன் வழியில் செல்லச் செல்ல தானாக அனைத்தும் நிறைவேறும் அப்பனே. அதே போலத்தான் அப்பனே , புண்ணியப் பாதையில் சென்று, அனைத்தும் செய்தால், தானாக நடக்குமப்பா அனைத்தும்.
அப்பனே தன் கடமையைச் செய்ய வேண்டும் முதலில். இன்னும் புரிய வைக்கின்றேன் அப்பனே. புரிய வைத்து அனைத்தும் செய்கின்றேன் போதுமா? அப்பனே நலன்கள் ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!








Comments
Post a Comment