Skip to main content

அன்புடன் அகத்தியர் - 365 | anbudan agathiyar 365 - நாள் 5

                                                     இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...



 சித்தன் அருள் - 1826 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி - 6 ! 

குருநாதர் :- அப்பனே இதனால் பல பல உண்மைகள் இருக்கின்றதப்பா. அப்பனே நிச்சயம் நீங்கள் அனைவருமே புண்ணியங்கள் செய்ய வேண்டும் அப்பனே. அப்பனே ஏன் எதற்காகச் சொன்னேன் என்றால் அப்பனே புண்ணியங்கள் செய்யாவிடில் மீண்டும் இவ் ஆன்மா பிறப்பெடுத்து கஷ்டங்கள் படுமப்பா. அப்பனே ஏன் எதற்காக அப்பனே நீர் தானம் செய்யச்சொன்னேன் அப்பனே. ஏன் எதற்காக என்று யாராவது ( இளமையில் உயிரோடு நீர் தானம் செய்யாமல் ) எதை என்று அறிய அறிய ஆனால் இறக்கும்போது ( கடைசி இறுதிக் காலத்தில் அடுத்தவர்கள் அவர் இறந்தபின் அவருக்கு ) செய்வார்களப்பா. அப்பனே என்ன லாபம் அப்பனே? 

அப்பனே உயிரோடு இருக்கும்போது ஒருவன் செய்ய வேண்டியவை (தானங்கள்) சொல்கின்றேன் அப்பனே. நீர் தானம் செய்ய வேண்டும். அப்பனே மோர் தானம் செய்ய வேண்டும். அறிந்தும் கூட குடை தானம் செய்ய வேண்டும். அறிந்தும் கூட உடுத்த ஆடைகள் தானம் செய்ய வேண்டும். அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் இன்னும் மனிதனுக்கு என்னென்ன தேவையோ அவையெல்லாம் தானம் செய்தால்தான் அப்பனே நீ போகும்போது ( இறந்த பின்னர் ) இறைவன் அழைத்துச் செல்வான்.  
அப்படி இல்லை என்றால் மீண்டும் பிறவி எடுத்து அதாவது நீங்கள் செய்ய வில்லை என்றால் உங்கள் குடும்பத்திற்கே கஷ்டங்கள் வந்துவிடும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. இது தேவையா அப்பனே? முதலில் அதனைத் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. ( பல வகை புண்ணியங்கள் செய்தல் ) அதைத் தெரிந்து கொள்ளாமல் அப்பனே , அனைத்தும் என்னிடத்தில் கேட்டால் அப்பனே எப்படியப்பா யாங்கள் வந்து வாக்குகள் உரைப்பது? சொல்லுங்கள் அப்பனே? நீங்களே அப்பனே?  

சுவடி ஓதும் மைந்தன் :- புரிகின்றதா ஐயா. ( வாழும் போது ) செய்ய வேண்டியதைச் செய்யாமல் , இறந்த பின் மற்றொருவர் ( பிண்டத்திற்கு ) செய்வார். இது தேவையா என்று கேட்கின்றார் ஐயா. இது எல்லாம் தெரியாமல் எனக்கு நல்லது செய், நல்லது செய் என்றால் எப்படிச் செய்ய முடியும் என்று கேட்கின்றார் ஐயா. நீர் தானம் செய்யவேண்டும். மோர் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் குடும்பமே கஷ்டப்படும் என்று சொல்கின்றார். அதனால்தான் புண்ணியங்கள் செய்து , உங்களுக்கு நீங்களே துணை என்று சொல்கின்றார் ஐயா. 

அடியவர் 4 :- சரிங்க சாமி. 

சித்தன் அருள் - 1584 - அகத்தியப்பெருமானின் உத்தரவு! 



அனைவருக்கும் நீர் தானம் செய்யுங்கள் அப்பனே!!!(நீர் மோர் அன்னதானங்கள்) அப்பனே இவற்றை அதிகப்படுத்துங்கள் அப்பனே.... மனிதர்களுடைய பாவத்தை நீக்குவதற்கு புண்ணியம் மட்டுமே அப்பனே எதை என்று கூட அப்பனே இப்படி நீங்கள் செய்து கொண்டே வந்தால் தான் அப்பனே ஈசனும் சூரியனிடம் சற்று விலகி நிற்க கூறுவானப்பா!!!! அப்பனே மனிதர்களிடத்தில் புண்ணியம் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் நன்மை ஏற்படும் என்பேன் அப்பனே!!!














ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


Comments

Popular posts from this blog

அன்புடன் அகத்தியர் - 21 - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

                                                           இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!  24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்! நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல...

அன்புடன் அகத்தியர் - 17 - பொதுவாக்கு!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!  ஆடி அமாவாசை 08/8/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு உரைத்த இடம் திருவண்ணாமலை ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகிறேன் அகத்தியன். அப்பனே அருள்கள் அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன். அப்பனே நல் முறையாக மாற்றம் இவ்வுலகத்தில் சில சில தீவினைகளும் நடக்கும் என்பேன். ஆனாலும் எவையென்று கலியுகத்தில் நான் காப்பேன் என்பேன். அப்பனே நல் முறைகளாக இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன் நல் முறையாக என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் தந்து கொண்டு வந்துதான் இருக்கின்றேன் அப்பனே நல் முறைகளாக குறைகள் இல்லை. அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விதியின் பாதையிலே சென்று நல் முறையாக கடந்துவிட்டால்...

அன்புடன் அகத்தியர் - 14 - ஓதிமலை அருள்வாக்கு-1

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1    ஓதி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 1 ஆதி பரம்பொருளை உள் நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன் அப்பனே நலன்கள் மேலோங்கும் என்பேன்! நல் முறையாக முருகனும் எவ்வாறு என்பதை உணர்ந்து நல் ஆசிகளை தந்து கொண்டே இருக்கின்றான்! ஆனால் மக்களோ எதை எதை என்று கூட மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இப்படியே இவை செல்லச் செல்ல அழிவுதான் ஏற்படும் என்பேன். ஆனாலும் நல் முறையாக தாய் தந்தை நீயே அனைத்தும் நீயே என்று வேண்டிக் கொள்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன்! என்பேன் இனிமேலும், நல் முறையாக அப்பனே எவை எவை கூறும் அளவிற்கு கூட தகுதியான மனிதர்களை மட்டும் தான் இங்கே அழைப்பான் மு...