Skip to main content

அன்புடன் அகத்தியர் -5 - நாடி வாக்கு - சிதம்பரம்!

                                                     இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...



 சித்தன் அருள் - 998 - அன்புடன் அகத்தியர் - நாடி வாக்கு - சிதம்பரம்! 

ஒரு முறை சிதம்பரம் கோவிலில் அர்த்தஜாம பூஜைக்காக காத்திருந்த பொழுது, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் நாடி வாசிக்க வேண்டி வந்தது. தனிப்பட்ட நாடி வாக்கில் அகத்தியப் பெருமான் வந்து பொதுவான ஒரு சூட்சுமத்தை உரைத்தார். அதை மட்டும் அடியவர்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே தருகிறேன்.

"அப்பனே, இன்னொரு விளக்கத்தையும் ஒரு சூட்சுமமாக விளக்குகின்றேன்.  யாரும் விளக்கவில்லை. அப்பனே! பௌர்ணமி, அமாவாசை திதிகளில் இங்கு அமர்ந்து/உறங்கினால் அப்பனே, உடுக்கை சத்தம் கேட்கும், அப்பனே! நடை பயணம் கேட்கும், சலங்கை ஒலி கேட்கும். அப்பனே இங்கு திரிவார் என்பது திண்ணம். சிவபெருமான் இங்கு நடப்பதை கேட்கலாம். இது ஞானிகளுக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது.

அப்பனே! எவையென்று கூற! அப்பனே! இன்னொரு விளக்கத்தையும், மிக சூட்சுமமாக விளக்குக்கின்றேன். இதையும் யாரும் விளக்கவில்லை. அப்பனே! இரவு இங்கு உலா வந்து ஒரு காலம் அமர்ந்து, பின்னர் அண்ணாமலைக்கு வருவான். பின்னர் அங்கு சுற்றி திரிவான் இறைவன். பின்பு ஏகாம்பரம் என்றழைக்க கூடிய காஞ்சிபுரம் செல்வான். இங்கிருந்து காளத்திரி (காளஹஸ்தி) போவான். அதன் பின்னர் அதிகாலையில் திருவானைக்காவில் நீராடுவான் இவன்" என்றார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நாடி வாசித்தது ஒரு அமாவாசை திதி அன்று, சிதம்பரத்தில். நாடி வாக்கை பதிவு செய்த பொழுது, பின்னணியில் சதங்கை ஒலியும் பதிவாகியுள்ளது. அதை உணரும் பாக்கியம் ஒரு சிலருக்குத்தான் கிடைத்துள்ளது.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அன்புடன் அகத்தியர்.....தொடரும்!

Comments

Popular posts from this blog

அன்புடன் அகத்தியர் - 21 - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

                                                           இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!  24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்! நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல...

அன்புடன் அகத்தியர் - 28 - சிவன் வாக்கு -காசி!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1039 - அன்புடன் அகத்தியர் - சிவன் வாக்கு -காசி!  1/10/2021 பிரம்மமுகூர்த்தத்தில் காசி கங்கைகரையில் - உலகையாளும் பரமேஸ்வரன் பார்வதி தேவியின் கேள்விகளுக்கு   உரைத்த பொது வாக்கு   வாக்குரைத்த ஸ்தலம்: காசி. கங்கைகரை. படைத்தல் காத்தல் அழித்தல் முத்தொழிலும் செய்யும் என் தேவனே மனதில் நன்றாக துதித்து சில கேள்விகளை நாட்டுகின்றேன் பார்வதி தேவி. தேவனே இவ்வுலகத்தில் என்னென்ன இனியும் நடைபெறும்? தேவியே பின் அநியாயங்கள் அக்கிரமங்கள் பித்தலாட்டங்கள் இன்னும் பலவகையான தரித்திரங்கள் எல்லாம் இனிவரும் காலங்களில் நடந்தேறும் என்பேன். தேவனே இதனையும் தடுக்க யாரிடம் சக்தி உள்ளது?? சொல்கின்றேன் தேவியே மனிதனிடத்தில் சக்திகள் இருக்கின்றது ஆனாலும் இதை உணரவே இல...

அன்புடன் அகத்தியர் - 17 - பொதுவாக்கு!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!  ஆடி அமாவாசை 08/8/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு உரைத்த இடம் திருவண்ணாமலை ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகிறேன் அகத்தியன். அப்பனே அருள்கள் அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன். அப்பனே நல் முறையாக மாற்றம் இவ்வுலகத்தில் சில சில தீவினைகளும் நடக்கும் என்பேன். ஆனாலும் எவையென்று கலியுகத்தில் நான் காப்பேன் என்பேன். அப்பனே நல் முறைகளாக இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன் நல் முறையாக என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் தந்து கொண்டு வந்துதான் இருக்கின்றேன் அப்பனே நல் முறைகளாக குறைகள் இல்லை. அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விதியின் பாதையிலே சென்று நல் முறையாக கடந்துவிட்டால்...