இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1001 - அன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சமீபத்தில்
தனிப்பட்ட முறையில் ஒரு சில விஷயங்களை கேட்டு அதற்கு நாடி வழி நம்
குருநாதர் பதிலளிக்கையில், பொதுவாக ஒரு விஷயத்தை கூறினார். அதை உங்கள் முன்
சமர்ப்பிக்கிறேன்.
இனி
வரும் காலங்களில், மனிதனுக்கு, என்ன வியாதி இது என்று தெரியாத அளவுக்கு
நோய்கள் வரும், என்கிறார் அகத்தியப்பெருமான். அவற்றிலிருந்து விடுபட, கீழ்
கூறிய மூலிகைகளை பொடித்து, ஒன்று சேர்த்து, தேனில் கலந்து, ஒரு சிறு
உருண்டையாக்கி, தினம், காலை, மதியம், இரவு என மூன்று வேளை உட்கொண்டால்,
நோயிலிருந்து விடுபடலாம் என்ற தகவலை நமக்கு அருளிய பின் "இருவாரங்களுக்கு
த்யானத்தில் இருக்கப்போகிறேன், அருள் வாக்கு யாருக்கும் இப்போது கிடையாது"
என்று கூறி சென்றிருக்கிறார்.
அவர் கூறிய மூலிகைகள் (அளவு குறிப்பிடவில்லை):-
- எலுமிச்சை தோல் - 4
- சோம்பு
- கிராம்பு
- பட்டை
- சுக்கு
- மிளகு
- ஏலக்காய்
- அதிமதுரம்
- சித்தரத்தை
- ஆடாதோடை
- துளசி
- மஞ்சள்
- கடுக்காய்
- இஞ்சி
- கரிசலாங்கண்ணி
- பொன்னாங்கண்ணி
- மணத்தக்காளி
- கோரைக்கிழங்கு
- நித்யகல்யாணி
- ஆவாரம்பூ பொடி
- குறுமிளகு
- கருஞ்சீரகம்
- செம்பருத்தி பூ
- அவுரி இலை
- வெற்றிலை
- தூதுவளை
- கற்பூரவல்லி
- நெல்லிப்பொடி
- காசினிப்பொடி
- வேப்பம்பூ
இயன்றவர்கள், அகத்தியப்பெருமானின் இந்த மூலிகைகளை பயன்படுத்தி, நல் ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அன்புடன் அகத்தியர்.....தொடரும்!


Comments
Post a Comment