இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1037 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்! 15/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த இடம். ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சித்தருகாவூர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன் நல் முறைகள் ஆகவே இத்தலம் உயர்வடையும் என்பேன் பல சித்தர்களும் இங்கு நாடி வந்து பல சித்துக்களும் செய்தார்கள் என்பேன். அப்பனே இங்கு ஓர் பெரிய மண்டபம் உண்டு என்பேன் இதனால் அதில் கூட பல சித்தர்கள் ஞானிகள் வந்து அமர்ந்து உறங்கி சென்று இருக்கின்றார்கள் முன்னொரு காலத்தில் என்பேன். நல் முறைகள் ஆகவே எவை என்று கூற இதனையும் நல் முறைகள் ஆகவே கரு...