இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1066 - அன்புடன் அகத்தியர் - மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி வாக்கு!
இவந்தன் (மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) அருமை பெருமைகள் நன்றாகவே தெரியும். என்பதற்கிணங்க இவந்தனும் நல் முறைகளாக தவத்திலேயே இருக்கின்றான் என்பேன்.
அதனால் நீங்களும் எதையும் கேட்க தேவை இல்லை என்பேன் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்யுங்கள்.பின் நலமாகும்.
நலமாகும் என்பேன்.
இவந்தனும் உற்று பின் மறுமுனையில் இவந்தனும் ஓர் தவத்தில் இருக்கின்ற பொழுது மீண்டும் கண்ணை திறப்பான் என்பேன். அவ் நேரம் இரவு எட்டு மணியே என்பேன்.
அதன் முன்னே ஒரு அரைமணிநேரம் வந்து பின் தியானங்கள் செய்தால் இவந்தன் விழிப்பான்.
யான் சொல்லிய நேரத்தில் அனைவருக்கும் ஆசிகள் கொடுப்பான் என்பேன் இதனை அனைவரும் தவறாமல் செய்தல் வேண்டும் என்பேன்.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்...

Comments
Post a Comment