Skip to main content

அன்புடன் அகத்தியர் - 365 | anbudan agathiyar 365 - நாள் 26

                                                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...







27/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம் : உச்சிஷ்ட கணபதி கோயில் மணிமூர்த்தீஸ்வரம். திருநெல்வேலி மாவட்டம்.


ஆனாலும் பலத்த எதையென்று கூற உச்சம்பெற்ற... அப்பனே பாவங்கள் அப்பனே ""அஷ்டமா"" எதையென்று கூற அவ் ""அஷ்டமா!!!!!(8 வகையான பெரும் பாவங்கள்) கர்மாக்களை பெற்றவர்கள் எதையென்று கூற நிச்சயம் வாழ்வில் உயர மாட்டார்கள் என்பேன்.

எத்திருத்தலத்திற்கு சென்றாலும்... எதனை என்றாலும் கூட ஒன்றும் செய்ய இயலாது.

செய்ய இயலாது என்பேன்.

அதுமட்டுமில்லாமல் ஏதும் நடக்காது என்பேன்.அவ் அஷ்ட கர்மாக்களை நீக்கினால்தான் மனது தெம்படையும் என்பேன்.

அவை மட்டுமில்லாமல் அனைத்தும் நிறைவேறும் என்பேன். எதையென்று கூற பல பாக்கியங்கள் வந்து சேரும் என்பேன். 

அதனால் எதை என்று கூற அவ் அஷ்டகர்மத்தை வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் நிச்சயம் இறைவனை அடைய முடியாது என்பேன்.

கஷ்டங்கள் தான் கூடிக்கொண்டே இருக்கும். இவையென்று கூற .....

ஆனாலும் இவை தன் முன் ஜென்மத்தில் வந்தவையா??

இந்த ஜென்மத்தில் வந்தவையா?? என்று கேட்டால் நிச்சயம் அனைத்து ஜென்மங்களிலும் இருந்து வந்தவை!! இச் ஜென்மத்திலிருந்தும் வந்தவையே என்பேன். பிறப்பெடுத்தும் கூட....

இதனால் எதை என்று கூற இத்திருத்தலத்திற்கு வந்து கொண்டே சென்று கொண்டிருந்தால் அவ் அஷ்ட கர்மாக்களை அழிக்க முடியும் என்பேன்.

ஆனாலும் அதற்கும் எதை என்று கூற  இவ் பிள்ளையோன்(பிள்ளையார்) வரவழைக்க வேண்டும் என்பேன். இவன் அருள் இல்லாமல் நிச்சயம் இங்கு வர முடியாது என்பேன்.
















7/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த  ஆலய பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் :

அருள்மிகு 
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
நித்யகல்யாணி அம்பாள். 
ஆலங்குடி நெடார்.கிராமம் மானாங்கோரை அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம்.

ஆனாலும் பின் விதியில் (ராஜ ராஜ சோழன்) கூட இல்லை ஆனாலும் மாற்றி விடுகின்றேன்!! இதனால் தான் இதையன்றி கூற விதியையே மாற்றி அமைத்து யாரும் செய்ய முடியாத அளவிற்கு பின் செய்வித்தான்!!! ( தஞ்சை பெரிய கோயில்) ராஜராஜசோழன்.

இனிமேலும் அவந்தனையும், புகழையும் யாரும் ஒன்றும் செய்ய இயலாது!!!  இதையன்றி கூற....

கூற இதையன்றி அதனால் தான் இங்கு பலமாக அவந்தனுக்கு பின் யோசனைகள் வந்தது.

எவ்வாறு இங்குதான் எவை என்று பல காலம் தங்கினான்... எப்படியெல்லாம்??? மனிதர்களை ஏற்படுத்த வேண்டும்!!
இதற்கு பன் மடங்கு உயர்வு பெற வேண்டும் என்றெல்லாம் வினாவினான்!!

ஆனாலும் இதனால் தான் இதையென்று கூற

 ""விதியையே மாற்றவல்லது இவ்வாலயம்"!!!!!

இதனால்தான் இப்பெயர்(பிரம்மபுரீஸ்வரர்) பெற்றது என்பேன்.



அடியவர்:- ஐயா இராமேஸ்வரம் போகச்சொன்னாங்க …. (அம்மை ஒருவர் இராமேஸ்வரம் செல்வது குறித்து கேள்வியை குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி பாதம் பணிந்து மதுரையில் அடியவர் இல்லத்தில் வைத்து கேட்ட போது, அன்பே வடிவான  அகத்திய பிரம்ம ரிஷி உலகோர் நன்மைக்காக இதுவரை உலகம் அறியாத இரகசிய வாக்கு ஒன்றை அருளினார்கள். அந்த வாக்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்)

குருநாதர்:- அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்கு எதற்கு போகச்சொன்னேன்?  அதுவே கடைசி பின் ஈர்ப்புத்திறன் அதாவது தனுசுகோடி அங்குதான் இவ் ஆன்மாக்கள் ( முன்னோர்கள் ) அனைத்துமே தேங்கி நிற்க்கும். ஒரு சக்தியானது இவ் ஆன்மாகளை அங்கு இழுத்துக்கொள்ளும்.  அங்கு சென்றால்  (தனுசுகோடி) அருகே சென்றால் உங்களுக்கும் அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்பட்டு மீண்டும் அவ்ஆன்மா ( முன்னோர்கள் ) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் நிச்சயம் வேறு வேறு உயிருக்கு அதாவது அப்படியே அவ் ஆன்மா மாறிவிடும் (பிறவி எடுத்து விடும்) . (அப்படி பிறவி எடுக்கவில்லை) இல்லை என்றால் அங்கு நீ செல்கின்றாயே உள்ளே (அன்னை பர்வதவர்த்தினி உடனுறை ஆதி ஈசன் இராமநாத சுவாமி ) ஈசனிடத்தில் பின் அது சரணாகதி (முக்தி) அடைந்து விடும். இது யாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் அங்கு போகச்சொல்கின்றேன். போகச்சொல்கின்றேன்.

(முதலில் தனுஸ்கோடி அடிக்கடி சென்று பின் ஆதி ஈசன் இராமநாத சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து மனிதர்கள் வாழ்வில் சந்தோசங்கள் ஏற்படும்)



ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சர்வம் சிவார்ப்பணம்... 

Comments

Popular posts from this blog

அன்புடன் அகத்தியர் - 21 - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

                                                           இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!  24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்! நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல...

அன்புடன் அகத்தியர் - 17 - பொதுவாக்கு!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!  ஆடி அமாவாசை 08/8/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு உரைத்த இடம் திருவண்ணாமலை ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகிறேன் அகத்தியன். அப்பனே அருள்கள் அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன். அப்பனே நல் முறையாக மாற்றம் இவ்வுலகத்தில் சில சில தீவினைகளும் நடக்கும் என்பேன். ஆனாலும் எவையென்று கலியுகத்தில் நான் காப்பேன் என்பேன். அப்பனே நல் முறைகளாக இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன் நல் முறையாக என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் தந்து கொண்டு வந்துதான் இருக்கின்றேன் அப்பனே நல் முறைகளாக குறைகள் இல்லை. அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விதியின் பாதையிலே சென்று நல் முறையாக கடந்துவிட்டால்...

அன்புடன் அகத்தியர் - 14 - ஓதிமலை அருள்வாக்கு-1

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1    ஓதி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 1 ஆதி பரம்பொருளை உள் நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன் அப்பனே நலன்கள் மேலோங்கும் என்பேன்! நல் முறையாக முருகனும் எவ்வாறு என்பதை உணர்ந்து நல் ஆசிகளை தந்து கொண்டே இருக்கின்றான்! ஆனால் மக்களோ எதை எதை என்று கூட மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இப்படியே இவை செல்லச் செல்ல அழிவுதான் ஏற்படும் என்பேன். ஆனாலும் நல் முறையாக தாய் தந்தை நீயே அனைத்தும் நீயே என்று வேண்டிக் கொள்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன்! என்பேன் இனிமேலும், நல் முறையாக அப்பனே எவை எவை கூறும் அளவிற்கு கூட தகுதியான மனிதர்களை மட்டும் தான் இங்கே அழைப்பான் மு...