இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1026 - அன்புடன் அகத்தியர் - முத்தம்பட்டி அனுமார் ஆலயம்!
18/8/2021 அன்று தர்மபுரி முத்தம்பட்டி அனுமன் ஆலயத்தைப் பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு:-
அப்பனே நல்லாசிகள் நல் முறையாக முறையாக இந்த ஆலயத்திற்கு என்று ஒரு சிறப்பு உள்ளது அப்பனே
இறைவன் ராம அவதாரத்தில் நல் முறையாக இலங்கையில் யுத்தகளத்தில் ராமனுக்கு மூலிகைகள் தேவைப்பட பின் நல் முறையாய் அனுமனை பணித்து நல் முறையாக சென்று மூலிகைகளைப் பறித்து வா என்று கட்டளை இட்டான்.... அனுமனும் நல் முறையாகவே மூலிகைகளை தேடி அலைந்து கடைசியில் சஞ்சீவி மலையை பெயர்த்து பின் நல் முறையாக ராமனிடம் கொண்டு சேர்த்தான்.
ராமனும் நல் முறையாக மூலிகைகளை பரிசோதித்து சில மூலிகைகள் கிடைக்கவில்லை மீண்டும் சென்று அந்த மூலிகைகளை பறித்து வா என்று கூறினான்.
அனுமனும் அந்த மூலிகைகளை தேடி இந்த காட்டிற்கு வந்தான் தொப்பூர் காடு என்ற பெயர் இந்த காட்டிற்கு வந்த பொழுது அந்த மூலிகைகள் கிடைத்தது அதை பறித்து செல்ல முற்படும் பொழுது நல் முறையாக அந்த மலையிலும் காட்டிலும் வாழ்ந்து வந்த தேவதைகள் ஆஞ்சநேயா இந்த மூலிகைகளை பறித்து செல்ல எங்களது அனுமதி தேவை எங்களின் அனுமதி வேண்டும் என்றால் நீ இங்கே இருக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும் இந்த மலையில் பல அக்கிரமங்களும் அநியாயங்களும் வருங்காலத்தில் நடந்தேறும். இவ்வாறு நடக்காமல் நீ இங்கேயே இருந்து காக்க வேண்டும் தவறான காரியங்களை செய்ய வருபவர்களை தண்டிக்க வேண்டும் அப்போதுதான் இந்த மூலிகைகளை நாங்கள் தருவோம் என்று கூறிய பின் நல் முறையாக
பின் நல் முறையாக அனுமனும் சரி என்று சொல்லி மூலிகைகளை தாருங்கள் என்று கேட்டு மூலிகைகளை பறித்து பின் நல் முறைகள் ஆகவே புறப்பட்டான் அப்போது தேவதைகள் என்ன ஆஞ்சநேயா நீ உரைத்ததை மறந்து விட்டாயா?
நீ இங்கேயே இருக்கப் போவதாக வாக்கு தந்தாய் இப்பொழுது நீசெல்கின்றாயே இது நியாயமா?
அனுமனும் பின் நல் முறையாக தேவதைகளே நோக்கி நான் இந்த மூலிகைகளை என் இறைவன் ராமனிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் சற்று பின்னால் திரும்பிப் பாருங்கள் என்று கூறினான். அப்பொழுது அவர்கள் பின்னால் சுயம்பு வடிவாக கல்லால் அனுமன் சிலையாக தோன்றினான்.
பின் நல் முறைகள் ஆகவே தேவதைகளே நான் இந்த காட்டில் இருக்கப் போகின்றேன். தவறான எண்ணம் கொண்டு வருபவர்கள் தவறை செய்ய வருபவர்கள் அனைவரையும் தண்டிப்பேன். இந்த காடுகளையும் மலைகளையும் நான் இங்கிருந்தே காப்பேன் என்று வாக்கு தந்தான். அந்த இடம்தான் இந்த கோயில் அப்பனே! இப்பொழுதும் இந்த இடத்திற்கு தவறான எண்ணம் கொண்டவர்கள் வரமுடியாது. தூய பக்தியுடன் நல் மனதாய் வருவோருக்கு அருள் தந்து கொண்டுதான் இருக்கின்றான், இந்த அனுமன்.
அப்பனே என்னுடைய நல்லாசிகள்.



Comments
Post a Comment