இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
அப்பனே அனைவருக்கும் நீர், மோர் தானம் செய்யுங்கள்
சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு!
22/4/2024 அன்று டணாநாயக்கன் கோட்டை கோயில் என்று அழைக்கப்படும் வீரபத்ர சோமேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயிலில் பவானிசாகர் சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம். இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் பக்தர்களுக்கு குருநாதர் தந்த உத்தரவு.
நல் மனதாகவே அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டே இருங்கள் அப்பனே!
தன்னால் முடியாவிடிலும் அப்பனே நிச்சயம் (புண்ணியங்கள்) ஏதோ ஒன்றை செய்து கொண்டே இருங்கள் அப்பனே!!!!!
இச்சித்திரை திங்களில் நிச்சயம் சித்திரகுப்தன் ( பாவ புண்ணிய கணக்கை) நிச்சயம் கணக்கை அழகாகவே எழுதி வைப்பான் அப்பா!!!!!
நீங்கள் என்ன இதில் தன் (சித்திரை மாதத்தில்) சித்திரகுப்தன் ( பாவ புண்ணிய கணக்கை) நிச்சயம் கணக்கை அழகாகவே எழுதி வைப்பான் அப்பா!!!!!
நீங்கள் என்ன இதில் தன் (சித்திரை மாதத்தில்) செய்கின்றீர்களோ...
அதுதான் அப்பா நிச்சயம் புண்ணியங்கள் ஆக்கி வருடம் முழுவதும் கிடைக்கும் அப்பா!!!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!
நிச்சயம் நீர்நிலைகளை (தண்ணீர் பந்தல்கள்) ஏற்படுத்துங்கள்!!!!!
இதில் செய்தால் (சித்திரை மாதத்தில்) நிச்சயம் பின் வைகாசி தன்னில் அப்பனே ஈசன் மனம் மகிழ்ந்து அறிந்தும் கூட அப்பனே பல பாவங்களை அகற்றுவான் (காசி)கங்கை தன்னில் கூட!!!
(வைகாசியில் காசி பயணம்) தன்னால் பின் வர முடியவில்லையே!!!!!
என்போருக்கும் நிச்சயம் அப்பனே ஈசன் அருள் புரிந்து தருவானப்பா!!!!
நீங்கள் சரியான வழியில் நிச்சயம் புண்ணியங்கள் பின் செய்தால் நிச்சயம் உங்கள் பரம்பரையையே அது காக்கும். உங்கள் பிள்ளைகளையும் நிச்சயம் நல்படியாக ஆக்கும். அதனால் நிச்சயம் இதை யான் சொல்கின்றேன்.
இதை செய்திட்டாலே போதுமானது. யானே வந்து உங்களுக்கு வாக்குகள் உங்களுக்கு தருகின்றேன் நிச்சயமாக.
ஆசிகள் ஆசிகள்.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்!


.jpeg)

.jpeg)


Comments
Post a Comment