இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1769 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 5!
150 .இப்போது ஒவ்வொரு பெயருக்கும் உரைத்த வழிபாடுகளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தார்கள்) ஏன் இதை சொல்ல , நிச்சயம் அங்கெல்லாம் சென்றால்தான் பிற பிற வினைகள் , சக்திகள் அதாவது பெயருக்கும் சக்திகள் இருக்கின்றது அம்மா. இவ் தமிழ் எழுத்துக்களிலே பல உண்மைகள் மறைந்து இருக்கின்றது. அதை தெரியாமல்தான், அதனால்தான் அவ் இடத்திற்கே அதாவது குற்றம் செய்தவன் குற்றம் இடத்திற்கே சென்றால் பாவம் கழியும். அதே போல்தான் பின் எழுத்துக்கள் கூட. அவ் எழுத்துக்கு எங்கு சொந்தக்காரன் என்றெல்லாம் அகத்தியன் எடுத்துரைப்பான். அவ் சக்திகள் , பின் எழுத்துக்களுக்கு கூட ஒவ்வொரு இறைவனை அறிந்தும் பின் பல வழிகளாகவே நிச்சயம் அவ்வாறு இறைவனும் பிரித்து. நிச்சயம் இவையெல்லாம் இனைத்தால் இறைவன் ஒருவனே. முதலில் அங்கு சென்றாலே நிச்சயம் உண்மைதனை வெளிப்படும். அவ் உண்மைகள் தெரிந்து கொண்டால் நீடோடி வாழலாம். யான் அதைச்செய்தால்தான் இது நடக்கும் என்று சொல்லவில்லை. அங்கு சென்றால் பலம் அதிகரிக்கும். அவ்வளவுதான்.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்...





Comments
Post a Comment